close
Choose your channels

இதுவரை வெளிவராத பார்த்திபனின் குடும்ப புகைப்படங்கள்... இணையத்தில் வைரல்!

Monday, January 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகில் வித்தியாசமான முயற்சிகள் எடுக்கும் வெகு சில இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன் என்பதும் அவரது ஒவ்வொரு படமும் இதுவரை யாரும் முயற்சிக்காத வித்தியாசமான படமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே.

கமர்சியல் படங்கள் அதிகமாக வெளிவந்த காலத்திலேயே ’புதிய பாதை’ என்ற வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய படத்தின் மூலம் தான் இயக்குனராக பார்த்திபன் அறிமுகமானார். அவரே நடித்து இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அவர் இயக்கத்தில் உருவான ’ஹவுஸ்புல்’ என்ற திரைப்படமும் விருதுகளை குவித்தது. மேலும் ’குடைக்குள் மழை’ ’வித்தகன்’ ’கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ ’ஒத்த செருப்பு’ ’இரவின் நிழல்’ ஆகிய வித்தியாசமான முயற்சிகளில் எடுக்கப்பட்ட படங்கள் மட்டுமின்றி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்ட பார்த்திபனுக்கு கீர்த்தனா, ராக்கி மற்றும் அபிநயா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதுவரை வெளி வராத பார்த்திபனின் திருமண புகைப்படங்கள் மற்றும் குடும்ப புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக பார்த்திபனின் சிறு வயது புகைப்படங்களும் வெளியாகி உள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.