close
Choose your channels

'பசங்க 2' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி

Thursday, December 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்திலும் பிந்துமாதவி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களிலும் நடித்த 'பசங்க 2' திரைப்படம் இன்றுமுதல் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கான முன்பதிவு திருப்தியாக இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்திருக்கும் நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவல் படக்குழுவினர்களுக்கு கிடைத்துள்ளது.


'பசங்க 2' படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குழந்தைகளுக்கான படம் என்பதால் கண்டிப்பாக வரிவிலக்கு கிடைக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்திருந்தது போலவே தற்போது வரிவிலக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தயாரிப்பாளர் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.

பாண்டியராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் குழந்தைகள் மட்டுமின்றி பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாகவே கருதப்படுகிறது. இந்த படம் ரசிகர்களை எந்த வகையில் கவர்ந்தது என்பதை இன்னும் சிலமணி நேரங்களில் இந்த படத்தின் திரை விமர்சனத்தில் பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.