close
Choose your channels

மோகன்லால் படத்தை இயக்கும் எந்திரன்-பாகுபலி 2 டெக்னீஷியன்

Saturday, May 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் படமான 'புலிமுருகன்' படத்தில் சிறப்பாக சண்டைப்பயிற்சி அமைத்த பீட்டர் ஹெயின், கடந்த ஆண்டிற்கான தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன்', சூர்யாவின் 'கஜினி' உள்பட பல படங்களுக்கு சண்டைப்பயிற்சி அமைத்த இவர் கடந்த வாரம் வெளிவந்த 'பாகுபலி 2' படத்திற்கும் சிறப்பாக போர்க்காட்சிகள் உள்பட சண்டைக்காட்சிகளை அமைத்திருந்தார். இந்த படத்திற்கும் அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பீட்டர் ஹெயின் வெகுவிரைவில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அவரது முதல் படத்தின் ஹீரோவாக மோகன்லால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மோகன்லால்-பீட்டர் ஹெயின் இணையும் இந்த படத்தில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் மோகன்லால் ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்டர் ஹெயின் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்', மோகன்லால் நடித்து வரும் 'வில்லன்' போன்ற படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் சுந்தர் சியின் 'சங்கமித்ரா' படத்திலும் இவர் பணியாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.