இன்று கமல் பிரச்சாரம் நடக்குமா? போலீஸ் அனுமதி மறுப்பு!

கமல்ஹாசனின் இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு பின்னர் அவரது தேர்தல் பிரச்சாரங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவதால் இன்று அவருடைய சூலூர் பிரச்சாரத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் கமல் பிரச்சாரத்தின்போது காலணி வீச்சும் நேற்று அரவக்குறிச்சியில் முட்டை மற்றும் கல்வீச்சும் நடைபெற்றதால் இன்று சூலூரில் அவரது பிரச்சாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் இன்றைய கமல்ஹாசனின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை சூலூரில் நடத்த கமல் திட்டமிட்டிருந்த நிலையில் அவரது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது பேச்சு அனைத்து மக்களையும் சென்றடைந்துள்ளதால் இன்றைய பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டாலும் தங்களது கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என மக்கள் நீதி மயயம் கட்சி தொண்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

More News

கமல் கூட்டத்தில் கல், முட்டை வீச்சு! பெரும் பரபரப்பு

நேற்று முன் தினம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கமல்ஹாசனின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவரை நோக்கி மர்ம நபர்கள் சிலர் காலணியை வீசிய நிலையில்

வெயிலின் கொடுமைக்கு பலியான விஜய்சேதுபதி பட நடிகர்!

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் அக்னிநட்சத்திர வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஐதராபாத்தில் விஜய்சேதுபதியின் படத்தில் நடித்து வரும் ரஷ்யா நடிகர் ஒருவர் வெயிலின்

'தளபதி 64' படத்தில் இணைந்த பெண் இயக்குனர்?

தளபதி விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 64' திரைப்படத்தை 'மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

30 வினாடிகள் பேசி 3 நாட்கள் பேச வைத்துவிட்டார் கமல்! பிரபல நடிகை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

இளசுகள் மத்தியில் ட்ரெண்டாகும் காக்ரோச் சேலஞ்ச்! 

தற்போதைய இளைஞர்கள் எதையும் மிகவும் வித்தியாசமாக செய்ய நினைக்கின்றனர்.  அந்த வகையில் சும்மா இருக்கும் நேரத்தில் ஏதேனும் ஒரு விஷயத்தை செய்து,