close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2': த்ரிஷா, ஐஸ்வர்யா ராயின் செம வீடியோ ரிலீஸ்..!

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளும் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் த்ரிஷாவின் குந்தவை கேரக்டருக்கு மேக்கப் செய்த விதம் குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யாராய் காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos