close
Choose your channels

பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Wednesday, March 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் திரைப்படம் ஒரு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உருவாகி வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளரான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷாவின் கெட்டப் உள்ளது என்பதும் இந்த போஸ்டரில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.