close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' ரன்னிங் டைம் இவ்வளவா? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கியின் நாவலான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகியுள்ளது உள்ளது என்பதும் இந்த படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 170 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்று கூறப்படுகிறது. இருப்பினும் சென்சார் சான்றிதழ் கிடைத்த பின்னர் தான் சரியான ரன்னிங் டைம் படைத்த தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.