close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தில் 'தளபதி 65' நாயகியா?

Tuesday, April 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தில் நாயகியாக சமீபத்தில் ஒப்பந்தம் ஆனார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ’முகமூடி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் ’தளபதி 65’ திரைப்படம் வெளியானால் தமிழ் திரையுலகில் மாளவிகா மோகனன் போல் பூஜாவும் ஒரு சுற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதை அடுத்து சூர்யாவின் அடுத்த படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் விரைவில் அவர் ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.