close
Choose your channels

மணிரத்னம் படத்தில் இணைந்த நாடக நடிகர்

Saturday, July 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி-அதிதிராவ் ஹைதி நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளவர் நாடக நடிகர் வாட்சன் நடராஜன். இவர் நடித்த THE LOOTER'S LOOTY என்ற நகைச்சுவை நாடகம் சென்னையில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
'காற்று வெளியிடை' படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்து வரும் வாட்சன் சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பில் ஒருசில காட்சிகளில் நடித்ததாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பில் தனக்கு அழுத்தமான காட்சிகள் இருப்பதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் அதனையடுத்து காஷ்மீரிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
நாடக நடிகரான தனக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிகப்பெரியது என்று கூறிய வாட்சன், கிருஷ்ணா, ஸ்வாதி ரெட்டி நடித்து வரும் 'யாக்கை' படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.