close
Choose your channels

பிரபாஸின் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று ‘சலார். பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ரவி பாஸ்ரூர் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு அதாவது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் ஏற்கனவே ’ராதே ஷ்யாம்’ மற்றும் ’ஆதி புருஷ்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.