'பிரேமலு' ஜோடி மாறிவிட்டதா? ஆளை மாற்றிய மம்தா பாஜூ.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான ‘பிரேமலு’ தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது. இந்த படத்தில் சச்சின் என்ற கேரக்டரில் நிஸ்லன், ரீனு என்ற கேரக்டரில் மமிதா பாஜு, அமல் என்ற கேரக்டரில் சங்கீத் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்
‘பிரேமலு’ படம் முழுவதும் இந்த 3 கேரக்டர்கள் வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பாக சச்சின் மற்றும் ரீனு கேரக்டர்கள் ரொமான்ஸ் மற்றும் காமெடியில் கலக்கி இருந்தது என்பது தெரிந்தது. அதேபோல் ஹீரோ நண்பனாக வரும் அமல் கேரக்டரும் அசத்தலாக இருந்தது என்பதும் இந்த மூன்று கேரக்டர் தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் சமீபத்தில் ‘பிரேமலு’ படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடப்பட்ட நிலையில் அதில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த விழாவில் கலந்து கொண்ட அமல் கேரக்டரில் நடித்த சங்கீத பிரதாப் மற்றும் ரீனு கேரக்டரில் நடித்த மமிதா பாஜூ ஆகிய இருவரும் ரொமான்ஸ் ஆக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. வீடியோவின் இறுதியில் சங்கீத் கன்னத்தில் மமிதா பாஜூ செல்லமாக தட்டும் காட்சி இருப்பதை பார்த்து ரசிகர்கள் இருவருக்கும் ரொமான்ஸ் என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.
சச்சினை விட்டுவிட்டு அமலை காதலிக்கிறேன் என்று சொல்லி, சச்சினுக்கு துரோகம் செய்யாதீர்கள் என்பது போன்ற கமெண்ட்ஸ் பதிவாகி வந்தாலும் இருவரும் நட்பு முறையில் தான் பழகி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது
Amal Davis & Reenu 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) April 21, 2024
pic.twitter.com/uWBiR1NPxv
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments