'தல'யுடன் மோதும் 'தல' ரசிகன்

  • IndiaGlitz, [Monday,October 26 2015]

வரும் தீபாவளி தினத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' மற்றும் தல அஜீத்தின் 'வேதாளம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ள நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை, ஆயிரத்தில் இருவர் ஆகிய சிறிய பட்ஜெட் படங்களும் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நகுல், பிரேம்ஜி அமரன், நிகிஷா படேல், ராதாரவி, மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்பட பலர் நடித்த 'நாரதன்' திரைப்படமும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளதாக இன்று முதல் விளம்பரங்கள் வந்துள்ளது. நாக வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான பிரேம்ஜி, தல அஜீத்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் இணைந்து 'மங்காத்தா' படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தல அஜீத் படமான 'வேதாளம்' படத்துடன் அவரது ரசிகரான பிரேம்ஜியின் 'நாரதன்' படம் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வேதாளம்' டெக்னிக்கல் டீமை உற்சாகப்படுத்திய அஜீத்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளிவர வேண்டும் என்பதற்காக அஜீத் உள்பட 'வேதாளம்' படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்...

பிரபல டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல குணசித்திர நடிகை மற்றும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது...

கமலிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? பிரபல இயக்குனர் விளக்கம்

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் சூப்பர் ஹிட் பெற்றது....

புல்லரிக்க வைக்கும் விஜய்யின் பரந்த மனம். ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு

இளையதளபதி விஜய்யின் பரந்த மனம் குறித்து பல சம்பவங்கள் வெளிவந்துள்ள நிலையில் சமீபத்தில் விஜய்யை சந்திக்க தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது...

'பாகுபலி' - 'காஞ்சனா 2' இணையும் 'வீரபலி'

இந்திய அளவில் சூப்பர் ஹிட் ஆன 'காஞ்சனா 2' இயக்குனர் ராகவா லாரன்ஸ் மற்றும் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆன 'பாகுபலி'....