close
Choose your channels

'தளபதி 67' படம் குறித்த சூப்பர் தகவலை தயாரிப்பாளர் லலித்!

Wednesday, January 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் ஒரு பக்கம் ரூ.200 கோடி என வசூலை வாரி குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 67 வது படமான ’தளபதி 67 ’ படத்தின் ஆச்சரியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ’தளபதி 67’ படத்தின் பூஜை நடைபெற்றது என்பதும் அதன் பிறகு முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட பல பிடிப்பு காஷ்மீரில் நடைபெற திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ’வாரிசு’ படத்தின் ரிலீஸுக்காக தான் காத்திருந்தோம் என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் ’தளபதி 67’ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் லலித் ’இன்னும் 10 நாட்களில் ’தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் அதன் பின் ஒவ்வொரு அப்டேட்டும் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அநேகமாக அடுத்த வாரம் ’தளபதி 67’ பாடத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான், உள்பட பலர் நடித்துவரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment