இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே. ஆனால் இந்த ராயல்டியில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளது என்றும், எனவே இளையராஜா பெறும் ராயல்டியில் 50% தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டும் என்றும் ஒருசில தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்

இந்த நிலையில் பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

பாடல்களுக்கான ராயல்டியில் 50% பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை என்று இந்த குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

More News

'தளபதி 63' இயக்குனர் அட்லியை சந்தித்த 'பேட்ட' டெக்னீஷியன்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் புரடொக்சன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன், நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரும் 'தளபதி 63' பட இயக்குனருமான அட்லியை சந்தித்துள்ளார்.

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் டிவியின் பெயர் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார்...

கஜா புயல் எதிரொலி: கடனை தள்ளுபடி செய்த டீக்கடைக்காரர்

இந்த நிலையில் கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஒன்றில் டீக்கடை வைத்திருக்கும் ஒருவர் தன்னுடைய கடையில் வாடிக்கையாளர்கள்...

இன்று அமெரிக்கா செல்கிறார் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும்,

டிசம்பர் 29ல் வெளியாகும் நயன்தாராவின் அடுத்த படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தல அஜித்துடன் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படமும், அவர் முக்கிய வேடத்தில் நடித்த 'கொலையுதிர்க்காலம்' என்ற திரைப்படமும்...