close
Choose your channels

இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

Saturday, December 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே. ஆனால் இந்த ராயல்டியில் தயாரிப்பாளர்களுக்கும் உரிமை உள்ளது என்றும், எனவே இளையராஜா பெறும் ராயல்டியில் 50% தயாரிப்பாளர்களுக்கும் தரவேண்டும் என்றும் ஒருசில தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர்

இந்த நிலையில் பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாக தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடித்த 'புலி' உள்பட ஒருசில படங்களை தயாரித்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இளையராஜா மீது இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.

பாடல்களுக்கான ராயல்டியில் 50% பங்கு இதுவரை எந்த தயாரிப்பாளர்களுக்கும் முறையாக வந்ததில்லை என்று இந்த குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.