close
Choose your channels

ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் டிவியின் பெயர் என்ன?

Saturday, December 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் அறிவிப்பு செய்து ஒரு வருடம் முடியவுள்ள நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் அனைத்தும் 90%க்கும் மேல் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதுள்ள முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் சொந்தமாக டிவி சேனல் இருப்பதை போல், விரைவில் கட்சி தொடங்கவுள்ள ரஜினி கட்சிக்கும் சொந்தமான சேனல் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பெயர்கள் குறிப்பிடப்பட்டு டிரேட் மார்க் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற மூன்று பெயர்களில் ஒரு பெயரில் விரைவில் டிவி சேனல் ஆரம்பிக்கவிருப்பதாகவும், இந்த சேனலில் ரஜினியின் அரசியல் கொள்கைகள், பிரச்சார வீடியோக்கள், ரஜினியின் திரைப்படங்கள் ஆகியவை ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

சமீபத்தில் தந்தி டிவியில் இருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே, ரஜினி ஆரம்பிக்கவுள்ள புதியசேனலில் இணைவார் என்ற வதந்திகள் பரவி வந்தாலும் இதுகுறித்த அதிகாரபூர்வ செய்தி வரும்வரை பொறுமை காப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.