close
Choose your channels

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

Thursday, March 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் இறுதி பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி தலைவர் பதவிக்கு ஐந்து பேர் போட்டியிடுகின்றனர். கலைப்புலி ஜி.சேகரன், கோதண்டராமையா, ராதாகிருஷ்ணன், டி.சிவா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேர் களத்தில் இருப்பதால் தலைவர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவர் பதவிக்கான வேட்பாளர் இறுதி பட்டியலை தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதால், வேட்பாளர்கள் தரப்பில் இருந்து விரைவில் அனல் பறக்கும் பிரச்சாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சங்கத்தை கைப்பற்றியது போல விஷால் தலைமையிலான இளைஞர்கள் அணி, தயாரிப்பாளர் சங்கத்தையும் கைப்பற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.