close
Choose your channels

லட்சுமிராய் வெளியேறி பின்னரே உள்ளே நுழையும் சோனாக்ஷி சின்ஹா

Monday, July 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய்யுடன் இணைந்து 'கத்தி' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது பாலிவுட்டில் 'அகிரா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சோனாக்ஷி சின்ஹா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த படத்தின் திருப்புமுனை கேரக்டர் ஒன்றில் நடிகை லட்சுமிராய் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த படவிழா ஒன்றில் பேசிய நடிகை லட்சுமிராய், 'ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கவேண்டும் என்பது எனது கனவுகளில் ஒன்று. அவருடைய இயக்கத்தில் தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டின் அவர் மூலம் எண்ட்ரி ஆவதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். இந்த படம் எனக்கு கண்டிப்பாக பாலிவுட்டில் பல வாய்ப்புகளை வாங்கித்தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இந்த படத்தில் சோனாக்ஷி முக்கிய வேடத்தில் நடித்திருந்தாலும் நானும் அவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. என்னுடைய கேரக்டர் வெளியேறிய பின்னர்தான் அவருடைய கேரக்டர் அறிமுகமாகிறது" என்று கூறியுள்ளார்.

லட்சுமிராய் தற்போது அகிரா' படம் தவிர ராகவா லாரன்ஸ் இயக்கும் 'ஒரு டிக்கெட்டுல ரெண்டு சினிமா, செளகார்பேட்டை, பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு மலையாள் படத்திலும் நடித்து வருகின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.