close
Choose your channels

ரூ.100 கோடி பட்ஜெட் படத்தில் ராகவா லாரன்ஸ்? சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர் தான் இயக்குனர்..!

Saturday, March 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும் இந்த படத்தை சூப்பர் ஹிட் படம் எடுத்த இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக தற்போது ராகவா லாரன்ஸ் உள்ளார் என்பதும் கடந்த ஆண்டு அவர் நடித்த ’ருத்ரன்’ ‘சந்திரமுகி 2’ மற்றும் ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது அவர் ’அதிகாரம்’ ’துர்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் மொத்தம் 100 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தை கோல்ட் மைன்ட் ஃபிலிம்ஸ் மற்றும் சத்ய ஜோதி மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை வெங்கட் மோகன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இயக்குனர் வெங்கட் மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால், ராஷி கண்ணா நடித்த ’அயோக்யா’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.