close
Choose your channels

2.0வை முந்தியதா காலா: ரிலீஸ் தேதி இதோ:

Saturday, February 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரித்த 'காலா' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இன்று இரவு 7 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும், அத்துடன் ரஜினியின் மாஸ் மற்றும் ஸ்டைல் போஸ்டர் ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.

இதன்படி சில வினாடிகளுக்கு முன் 'காலா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த படம் '2.0' படத்தை முந்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.