ரஜினி கட்சி மூன்றாவது இடத்தையே பிடிக்கும்: பிரபல அரசியல் கட்சியின் தலைவர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சியை குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கட்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இணைவார்கள் என்றும், அவரது கட்சியை மற்ற நடிகர்களின் கட்சிகள் போல இல்லாமல் அரசியல் பிரபலங்கள் நிறைந்த கட்சியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரஜினியின் அரசியல் வியூகம் என்ன? அவரது கட்சிக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என்பது குறித்து அறிய மற்ற அரசியல் கட்சியும் பொதுமக்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர், முதல் தேர்தலிலேயே ரஜினி ஆட்சியை பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த இரு கட்சிகளின் கூட்டணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி இருக்கும் என்றும், ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அந்த கட்சியை மூன்றாவது அணி என்று கூறுவார்களே தவிர அந்த அணி இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More News

சரிதா நாயரின் தண்டனை திடீர் நிறுத்தி வைப்பு!

பிரபல மலையாள நடிகையும் தொழிலதிபருமான சரிதா நாயருக்கு கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு இருந்த நிலையில்

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் மாஸ் நடிகர்?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் தீபாவளி திருநாளில் விஜய்யின் பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் வெளியான போதிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது.

பிக்பாஸ் வின்னர் நடிகர் படத்தின் சென்சார் தகவல்கள்

பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் நடித்த 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும்

பிக்பாஸ் போட்டியாளருக்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று கமல்ஹாசன் உள்பட பலர் கூறிவந்தனர்.

நிதின் சத்யாவின் அடுத்த படத்தின் வித்தியாசமான டைட்டில்!

நடிகர் நிதின்சத்யா தயாரித்த முதல் படமான 'ஜருகண்டி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அவர் தற்போது வைபவ் நடித்து வரும் படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.