close
Choose your channels

பிக்பாஸ் வின்னர் நடிகர் படத்தின் சென்சார் தகவல்கள்

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் நடித்த ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இந்த படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படம் நவம்பர் 8ல் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பதால் இந்த படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

ஆரவ், நிகிஷா பட்டேல், நாசர், ராதிகா, சாயாஜி ஷிண்டே, தேவதர்ஷினி, முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். சுரபி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சைமன்கிங் இசையமைத்துள்ளார்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.