close
Choose your channels

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திலும் மாஸ் நடிகர்?

Thursday, October 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படம் தீபாவளி திருநாளில் விஜய்யின் பிகில் என்ற பெரிய பட்ஜெட் படத்துடன் வெளியான போதிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு படிப்படியாக திரையரங்குகளும் காட்சிகளும் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ், தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன், அந்தோணி வர்கீஸ், சாந்தனு, உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் ’தளபதி 64’ படத்தை முடித்தவுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராகிய நடிகர் சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ்-சூர்யா இணையும் படத்திற்கு ’இரும்புக்கை மாயாவி’ என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.