close
Choose your channels

புதுக்காதலருடன் டேட்டிங்: கணவரை விவாகரத்து செய்கிறாரா ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை!

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த், விஜய் , தனுஷ் உள்பட பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் புது காதலருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த நடிகை எமிஜாக்சன், விஜய் இயக்கிய ’மதராசப்பட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த .2.0. தளபதி விஜய் நடித்த .தெறி. தனுஷ் நடித்த .தங்கமகன். விக்ரம் நடித்த .ஐ. உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த பிரபல தொழில் அதிபர் ஜார்ஜ் பனயோட்டோ என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது என்பதும், இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எமி ஜாக்சன் மற்றும் ஜார்ஜ் பனயோட்டோ ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு உடன் பிரிந்து இருப்பதாகவும் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் ஹாலிவுட் வட்டாரங்களில் வதந்தி பரவி வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டன் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் எமிஜாக்சன் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் விரைவில் எமிஜாக்சன் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.