close
Choose your channels

23 வயது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ்? ராஷ்மிகா மந்தனா அளித்த பதில்..!

Wednesday, March 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சுப்மன் கில் மீது கிரஷ்ஷா? என்ற கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா என்பதும் சமீபத்தில் வெளியான விஜய்யின் ’வாரிசு’ திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் பேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்ட போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார். அப்போது கிரிக்கெட் வீரர் சுப்மன் மீது கிரஷ்ஷா? என்ற கேள்விக்கு முதலில் பதில் சொல்ல தயங்கிய அவர் அதன் பிறகு கண்ணடித்து ஆம் என்று ஒப்புக்கொண்டார். அவரது இந்த பதில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இளம் கிரிக்கெட் சுப்மன் கில் வயது 23 என்பதும் ரஷ்மிகா மந்தனாவுக்கு 26 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர் மீது கிரஷ் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.