close
Choose your channels

ரஜினி-லோகேஷ் படத்தில் ரூ.1200 கோடி வசூல் பட ஹீரோ இணைகிறாரா?

Monday, June 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் 1200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த படத்தின் ஹீரோ நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து வரும் ’லியோ’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. யாஷ் நடித்த ’கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 1200 கோடி உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது தெரிந்ததே.

ரஜினியின் ‘தலைவர் 171’படத்தில் கேஜிஎஃப் 2’ யாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்திய திரை உலகின் மாஸ் படங்களில் ஒன்றாக ‘தலைவர் 171’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே மல்டி ஸ்டார் படம் என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் வேறு எந்தெந்த பிரபலங்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.