close
Choose your channels

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சாய்பல்லவி அளித்த சர்ப்ரைஸ்!

Monday, May 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அளித்துள்ளார் .

‘பிரேமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவி அதன் பின்னர் ’தியா’, ‘மாரி 2’, ’என்.ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்தார் என்பதும், தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சாய் பல்லவி நடிக்கும் மூன்று மொழி படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘கார்கி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகிவரும் இந்த படத்தை கௌதம் ராமச்சந்திரன் என்பவர் இயக்கியுள்ளார்.

96 படத்தின் மூலம் பிரபலமான இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.