close
Choose your channels

இந்தி திரையுலகிற்கு செல்லும் சாம் சிஎஸ்.. பிப்ரவரி 17ல் ரிலீஸ்..!

Wednesday, February 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’விக்ரம் வேதா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் பிரபலமான இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தற்போது இந்தி வெப் சீரிஸ் ஒன்றுக்கு இசையமைத்திருப்பதாகவும் அந்த வெப் சீரிஸ் நாளை மறுநாள் அதாவது பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விக்ரம் வேதா’ வெற்றிக்கு பிறகு இசையமைப்பாளர் கைதி, அடங்கமறு, சாணிக்காயிதம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி உள்பட பல தமிழ் படஙக்ளுக்கும், தெலுங்கு மலையாள படங்களுக்கும் இசையமைத்தார். மேலும் விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் தயாரானபோது, அதற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தயாராகியுள்ள ’தி நைட் மேனேஜர்’ என்ற வெப் சீரியஸ்க்கு சாம் சிஎஸ்இசையமைத்துள்ளார். ’பொன்னின் செல்வன்’ படத்தில் நடித்த சோபிதா துலிபாலா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த தொடரில் பாலிவுட் நடிகர்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகிறது. இத்தொடர் மூலம் இந்தியிலும் சாம் சிஎஸ் பிரபலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.