close
Choose your channels

சமந்தாவின் பச்சை காஸ்ட்யூமின் விலை இத்தனை லட்சமா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Saturday, March 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கருப்பு மற்றும் பச்சை காஸ்டியூம் அணிந்த சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த காஸ்ட்யூமின் விலை குறித்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் க்ரிட்டிக் சாய்ஸ் பிலிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவருடைய பச்சை நிற கிளாமர் காஸ்ட்யூம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளானது.

பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் அணிந்த இந்த காஸ்டியூம் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும். சமந்தா கூடுதல் அழகாக இருப்பதாகவும் பலர் அவரை வர்ணித்தனர். இந்த நிலையில் இந்த பச்சை மற்றும் கருப்பு உடையின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என கூறப்படுகிறது. இந்த தகவல் நெட்டிசன்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.