'விக்ரம்' அடுத்த படத்தை இயக்குவது சமந்தா பட இயக்குனரா?

  • IndiaGlitz, [Saturday,August 27 2022]

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை சமந்தா படத்தை இயக்கிய இயக்குனர் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதே போல் அவர் நடித்த மற்றொரு திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பவன்குமார் ஏற்கனவே ’யூ டர்ன்’ படத்தை இயக்கியிருந்தார் என்பதும், சமந்தா முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பவன்குமார் தற்போது பகத்பாசில் நடித்து வரும் படத்தை இயக்கி வரும் நிலையில் இப்படத்தை முடித்தவுடன் அவர் விக்ரம் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.

More News

என்னை பார்க்க நேரில் வரவேண்டாம்: மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை!

உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அதன்பின் சமீபத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு

அதிமுகவில் இணைந்த கே.பாக்யராஜ்: நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க நோட்டீஸ்!

 நடிகர் மற்றும் இயக்குநர் கே பாக்யராஜ் நேற்று ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில் நடிகர் சங்கத்திலிருந்து அவரை ஏன் நீக்கக் கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால்

பிரியா பவானிசங்கருக்கு த்ரில்லிங் அனுபவம் கொடுத்த காதலர்: வைரல் வீடியோ

 தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி சகோதரியின் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாம் ஆண்டு விழா

சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்மணிகளுக்கு, அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை,

14 வயதில் மகள், மீண்டும் கர்ப்பமான 'விக்ரம்' பட நடிகரின் மனைவி!

 கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் மீண்டும் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.