close
Choose your channels

என்னை பார்க்க நேரில் வரவேண்டாம்: மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை!

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் இமயம் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் அதன்பின் சமீபத்தில் அவர் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருந்தார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களை சமீபத்தில் வைரமுத்து அவர்கள் சந்தித்து பாரதிராஜா உடல்நலம் தேறி வருவதாக பேட்டி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: நான் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா பேசுகிறேன். நான் உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சிறப்பான சிகிச்சை காரணமாக நலம் பெற்று வருகிறேன்.

மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் பார்க்கின்றேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்! என பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.