close
Choose your channels

பிரியா பவானிசங்கருக்கு த்ரில்லிங் அனுபவம் கொடுத்த காதலர்: வைரல் வீடியோ

Saturday, August 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கர் கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார் என்பதும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர், சுற்றுப்பயணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் அவர்களில் வைரலாகி வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம். 

அந்த வகையில் வெளிநாட்டில் தற்போது சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது காதலர் கொடுத்த த்ரில் அனுபவம் குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

ஹெலிகாப்டரில் இருந்து உயரமான மலைப்பகுதியில் இருந்து பாராசூட் மூலம் பயிற்சியாளருடன் கீழே குதித்த அனுபவத்தை பிரியா பவானி சங்கர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன. இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.