close
Choose your channels

சமந்தாவின் பிரின்சஸ் காஸ்ட்யூம் டிசைன் செய்தது எப்படி? அவரே வெளியிட்ட வீடியோ..!

Friday, March 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை சமந்தா திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது அவரது காஸ்ட்யூம் பிரின்சஸ் போன்று இருந்ததை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர் என்பதும் அந்த காஸ்ட்யூம் இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த காஸ்ட்யூம் உடன் கூடிய போட்டோஷூட் புகைப்படத்தை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்த நிலையில் அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்தது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பிரின்சஸ் காஸ்ட்யூமுக்கு மிகப் பெரிய அளவில் ஆதரவு கிடைத்த நிலையில் இந்த காஸ்ட்யூம் செய்தது எப்படி? என்பது குறித்த வீடியோவை சற்றுமுன் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் மிகவும் கலை நயத்துடன் இந்த ஆடையை வடிவமைக்கும் முன் செய்த வரைபடங்கள், வடிவமைக்கும் போது செய்த வேலைப்பாடுகள் ஆகியவை குறித்த காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் மயோசிட்டி நோயிலிருந்து குணமாகிய நடிகை சமந்தா தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் என்பதும் தற்போது அவர் ’சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.