close
Choose your channels

'அரபிக்குத்து' பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சமந்தா: வீடியோ வைரல்

Friday, February 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த பாடல் யூ டியூபில் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்தது என்பதும் தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பர் 1 டிரெண்ட்டிங்கில் இருந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஏராளமான ரசிகர்கள் இந்த பாடலுக்கு நடனம் ஆடி சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவு செய்து வருகின்றனர் என்பதும், அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா ’அரபிக்குத்து’ பாடலுக்கு செம நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

தளபதி விஜய்யுடன் ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ திரைப்படங்களில் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.