close
Choose your channels

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்

Sunday, September 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காரைக்குடியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரும், பிரபல நடன இயக்குனருமான சாண்டி இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘விக்ரம்’ படத்தில் நடன இயக்குனராக பணி புரிய எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இந்த படத்தில் கமல்ஹாசனின் ஒரு பாடலுக்கு அவர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளதாகவும், இந்த படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், இந்த படத்தின் பாடலுக்கு நடனம் அமைப்பதன் மூலம் பல அனுபவங்களை தான் கற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு நடன இயக்குனராக பணிபுரியும் சாண்டி மாஸ்டரின் இந்த பாடலை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.