close
Choose your channels

ஒரே படத்தில் மனிஷா கொய்ராலா, அதிதிராவ் ஹைத்தி, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா.. வைரல் வீடியோ..!

Thursday, February 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் அடுத்த படம் ஒரு வெப் தொடராக உருவாகி வருகிறது.

’ஹீரமாண்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் மனிஷா கொய்ராலா, அதிதிராவ் ஹைத்தி, சோனாக்‌ஷி சின்ஹா, ரிச்சா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் வேசிகளின் வாழ்க்கையில் நடந்த காதல் மற்றும் துரோகம் பற்றிய கதையம்சம் கொண்டது இந்த தொடர் என்றும் 1940களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கொந்தளிப்பான பின்னணியில் இந்த வெப்தொடர் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தொடரின் புரமோஷன் வீடியோ சற்றுமுன் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.