சந்தானம் - ஆர்.கண்ணன் படத்தின் முக்கிய தகவல்!

  • IndiaGlitz, [Monday,September 02 2019]

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது. மசாலா பிக்ஸ் அசோசியேஷன் எம்.கே.ஆர்.பி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இந்த படத்தை வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவில் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கிய 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களில் சந்தானம் காமெடி நடிகராக நடித்திருந்த நிலையில் தற்போது அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சேரனை நாமினேட் செய்த கவின்: வத்திக்குச்சி வேலை பார்த்த வனிதா!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால்

விஜய்யும் இல்லை சிம்புவும் இல்லை, சிவகார்த்திகேயனே அடுத்த சூப்பர் ஸ்டார்: பிரபல பெண் அரசியல்வாதி 

சமீபத்தில் பேட்டியளித்த 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 'விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே

நடிகர் சார்லி மகன் திருமணம்: பிரபு வாழ்த்து

காமெடி மற்றும் குணசித்திர நடிகர் சார்லியின் மகன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. கோலிவுட் திரையுலகினர் பலர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழிசை சவுந்திரராஜனுக்கு புதிய பதவி: தமிழக பாஜக தலைவர் யார்?

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் தற்போது தெலுங்கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாரம் வெளியாகும் நான்கு திரைப்படங்கள்: ஒரு பார்வை

ஒவ்வொரு வாரமும் கோலிவுட் திரையுலகில் குறைந்தது நான்கு திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் அதாவது செப்டம்பர் 6ஆம் தேதி வெள்ளியன்று