close
Choose your channels

விஜய்யும் இல்லை சிம்புவும் இல்லை, சிவகார்த்திகேயனே அடுத்த சூப்பர் ஸ்டார்: பிரபல பெண் அரசியல்வாதி 

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பேட்டியளித்த 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 'விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும், ரஜினிக்கும் விஜய்க்கு மட்டுமே தற்போது திரையுலகில் போட்டி இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு சில மாதங்களுக்கு முன் அவர் தான் சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிமுகவின் ராஜ்யசபா எம்பியான சசிகலா புஷ்பா ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் 'அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யுமில்லை சிம்புவும் இல்லை சிவகார்த்திகேயன் தான் என்று கூறியுள்ளார். சின்னத்திரையில் தனது திறமைகளை வெளிப்படுத்தி, வெள்ளித்திரையில் தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், எந்த வித பின்புலமும் இல்லாமல் திரையுலகிற்கு வந்து வெற்றி பெற்றுள்ளதாகவும், விஜய்க்கு தைரியமிருந்தால் சிவகார்த்திகேயன் படத்துடன் அவரது படத்தை வெளியிட்டு பார்க்கட்டும் என்றும் சசிகலா புஷ்பா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

சசிகலா புஷ்பாவின் இந்த பேட்டி விஜய் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அஜித் ரசிகர்களுடன் மட்டுமே மோதி வந்த விஜய் ரசிகர்கள் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களுடனும் மோதி வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.