close
Choose your channels

சேரனை நாமினேட் செய்த கவின்: வத்திக்குச்சி வேலை பார்த்த வனிதா!

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது தெரிந்ததே. தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களில் ஒருவரை எலிமினேட் செய்ய இன்று நாம் நாமினேஷன் படலம் நடைபெறுகிறது.

இதில் சேரனை நாமினேஷன் செய்கிறார் கவின். சேரன் பார்க்காத வெற்றி இல்லை என்றும், தேசிய விருது உட்பட பல வெற்றிகளை பார்த்த அவர் எங்களை போன்ற இளைஞர்களின் வெற்றிக்காக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதனால்தான் அவரை நாமினேட் செய்வதாக கவின் காரணம் கூறினார். அதேபோல் கவின் நாமினேட் செய்த இன்னொரு போட்டியாளர் ஷெரின் என்பது குறிப்பிடத்தக்கது.

சேரனை கவின் நாமினேசன் செய்த காரணத்திற்கு வனிதா எதிர்ப்பு தெரிவித்து தனது வத்திக்குச்சி வேலையை தொடங்கியுள்ளார். 'நீ கூறிய காரணம் சரியில்லை' என்று வனிதா வாக்குவாதம் செய்ய, அதனை அடுத்து கடுப்பான கவின், சேரனை எனக்கு பிடிக்கவில்லை அவர் என்னை நாமினேட் செய்து வெளியே போ என்று சொன்னதால் பதிலுக்கு நான் நாமினேசன் செய்கிறேன், போதுமா? இப்ப திருப்தியா? என்று வனிதாவிடம் கவின் வாக்குவாதம் செய்ய பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வாரம் ஓப்பன் நாமினேசன் என்பதால் யார் யாரை நாம் நாமினேஷன் செய்வார்கள் என்பது வெளிப்படையாக தெரிய வரும். இதனால் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.