ஹவாய் தீவில் 'சர்கார்' படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • IndiaGlitz, [Wednesday,October 31 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வழக்கம்போல் பல்வேறு தடைகளை தாண்டி வரும் தீபாவளி தினம் முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் 6 நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் வியாபாரமும், புரமோஷனும் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தை அமெரிக்காவில் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் சர்கார்' திரைப்படம் வெளியாகவுள்ளது. பசுபிக் கடலின் மையத்தில் இருக்கும் இந்த தீவில் விஜய் படம் வெளியாவது இதுவே முதல்முறை என்ற பெருமை தற்போது கிடைத்துள்ளது.

ஏற்கனவே போலந்து நாட்டின் ஒருசில பகுதிகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 'சர்கார்' பெற்றுள்ளது என்பதை பார்த்தோம்.

More News

36 நாட்கள், சிங்கிள் ஷெட்யூல்: முடிந்தது சூர்யாவின் அடுத்த படம்

பிரபல நடிகர் சூர்யா திறமையான நடிகராக இருப்பது மட்டுமின்றி சினிமாவில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து வருவது தெரிந்ததே

ஒரே இயக்குனர் மீது தொடர் குற்றச்சாட்டு: 'சர்கார்' கதை விவகாரம் குறித்து தங்கர்பச்சான்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' கதை விவகாரம் ஒருவழியாக சமரசமாக தீர்க்கப்பட்டுவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் அவர் மீது தொடர்ந்து பலர் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.

தனுஷின் 'மாரி 2' குறித்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓ

அந்த கூட்டத்தில் நான் இல்லை: சர்கார் விவகாரத்திற்கு பின் சாந்தனு டுவீட்

விஜய் நடித்த 'சர்கார்' திரைக்கதையும் வருண் ராஜேந்திரன் பத்து வருடங்களுக்கு முன் எழுதிய செங்கோல் சிறுகதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தலைவர் பாக்யராஜ் கூறியபின்னர்தான்

கதை என்னுடையதுதான் : ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் கதை குறித்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் இந்த கதையை சொந்தம் கொண்டாடிய