close
Choose your channels

தனுஷின் 'மாரி 2' குறித்த முக்கிய அறிவிப்பு

Tuesday, October 30, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வடசென்னை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் 'மாரி 2' ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் முக்கிய அறிவிப்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளிவரும் என்று தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.