close
Choose your channels

'நானே வருவேன்': தனுஷின் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட செல்வராகவன்!

Thursday, April 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பதும் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’நானே வருவேன்’ படத்தின் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் செல்வராகவன் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தனுஷின் மாஸ் ஸ்டில் ஒன்றை வெளியிட்டுள்ளார். தனுஷ் தாடியும் ஸ்டைலாக நிற்கும் இந்த ஸ்டில்லுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இணைவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.

தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகிபாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.