close
Choose your channels

ஒட்டுமொத்த குடும்பமே சேப்பாக்கம் மைதானத்தில்.. தல மட்டும் மிஸ்ஸிங்.. ஷாலினி பகிர்ந்த சூப்பர் புகைப்படங்கள்..!

Saturday, March 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதியது என்பதும் இதில் சென்னை அபார வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

இந்த போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தந்து இருந்த நிலையில் திரையுலக பிரபலங்களும் பலர் வருகை தந்திருந்தனர் என்பதும் குறிப்பாக லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன், சதீஷ் உட்பட பலர் வருகை தந்திருந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் அஜித் தவிர அவரது குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை ரசித்த புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த பதிவில் ஷாலினி, ஷாம்லி, மற்றும் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி இருக்கும் புகைப்படம், அதனை அடுத்து ஷாலினி மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் உடன் இருக்கும் புகைப்படம் ஆகியவை இணையத்தில் வைரல் ஆகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் மஞ்சள் ஜெர்சியில் இருக்கும் நிலையில் தல மட்டும் மிஸ்ஸிங் என கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.