close
Choose your channels

மகளின் பிறந்த நாளில் ஷாலினி அஜித்தின் செம செல்பி புகைப்படம்: இணையத்தில் வைரல்

Wednesday, January 4, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் தனது மகளுடன் எடுத்த செல்பி புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் மற்றும் ஷாலினி காதலித்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பதும் இந்த தம்பதிகளுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே.

அனோஷ்கா என்ற பெயரிடப்பட்ட அந்த பெண் குழந்தையை தற்போது 15 வயது இளம் பெண்ணாக மாறி உள்ளதை அடுத்து நேற்று அவரது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் மகளின் பிறந்த நாளின் போது மகளுடன் ஷாலினி அஜித் எடுத்த செல்பி புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த செம புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் ஷாலினி அஜித், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் புத்தாண்டு தினத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வரும் நிலையில் தற்போது பிறந்த நாளின் போது மகளுக்கு வாழ்த்துக் கூறி எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.