close
Choose your channels

விஜய் ரசிகையாக மாறிய ஷாம்லி

Saturday, October 24, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1990ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'அஞ்சலி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர் பல படங்களில் நடித்த பேபி ஷாம்லி, தற்போது விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் 'வீர சிவாஜி' என்ற படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அஜீத் மனைவி ஷாலினியின் தங்கை என்பது அனைவரும் அறிந்ததே

'தகராறு' படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஷாம்லி, விஜய்யின் தீவிர ரசிகையாக நடித்துள்ளாராம். அஜீத் குடும்பத்தில் உள்ள ஒருவர் விஜய்யின் தீவிர ரசிகையாக நடிப்பது விஜய் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் பிரபு டாக்சி டிரைவராகவும், ஜான் விஜய் வில்லனாகவும் நடிக்கவுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கர், 'நான் கடவுள்' ராஜேந்திரன், யோகி பாபு ஆகிய மூன்று காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.