close
Choose your channels

'தளபதி 66' படத்தில் ஷங்கர் பட ஹீரோயின்?

Thursday, October 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ‘தளபதி 66’ படத்தில் ஷங்கர் படத்தின் நாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் தற்போது ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தை இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ’தளபதி 66’ திரைப்படத்திற்கு தமன் இசையமைக்க இருப்பதாகவும் பிரகாஷ்ராஜ் மற்றும் மகேஷ் பாபு மகள் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.