close
Choose your channels

ஷங்கர் படத்தில் நடிக்கும் நடிகைக்கு இத்தனை கோடி சம்பளமா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் ராம் சரண் தேஜா ஜோடியாக கைரா அத்வானி நடிப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை கைரா அத்வானிக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 66’ படத்திலும் நாயகியாக நடிக்க கைரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அந்த படத்திலும் இதே தொகையை சம்பளமாக பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா ஐந்து கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகிலும் ஐந்து கோடி சம்பளம் வாங்கும் நடிகை ஒருவர் உருவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.