close
Choose your channels

ஒரே படத்தில் தனுஷ்-சிம்பு. பிரபல இசையமைப்பாளரின் முயற்சி வெற்றி

Thursday, July 28, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் இரு துருவங்களாக இருக்கும் தனுஷ், சிம்பு ஆகிய இருவரையும் ஒரே சமயத்தில் இயக்கும் பெருமையை இயக்குனர் கவுதம் மேனன் பெற்றார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் இருவரையும் ஒரே படத்தில் பாட வைத்துள்ள பெருமையை பிரபல இசையமைப்பாளர் எஸ்.தமன் பெற்றுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் சாய்தரம் தேஜ் நடித்து வரும் 'திக்கா' என்ற தெலுங்கு படத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனுஷ் ஒரு பாடலை பாடிய நிலையில் தற்போது இதே படத்தில் சிம்புவும் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் படத்தில் கூட இதுவரை சிம்பு, தனுஷ் இணைந்து நடிக்கவோ, அல்லது பாடியதோ இல்லை. இந்நிலையில் தெலுங்கு படத்தில் இணைந்த இருவரும் விரைவில் தமிழ் படத்திலும் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று இருதரப்பு ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.