close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்திற்கு மகாகவி பாரதி பாடல் வரி டைட்டிலா?

Friday, August 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சிம்பு நடிக்கும் 47வது திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் டைட்டில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்று வெளியானது என்பதும் டைட்டில் போஸ்டரும் இணையதளங்களில் வைரலானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் திடீரென டைட்டிலை மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சிம்புவின் 47வது படத்தின் அதிகாரப்பூர்வ புது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12.15 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் டைட்டில் மகாகவி பாரதியாரின் பாடலில் உள்ள கவிதை வரி என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த டைட்டில் என்ன என்பதை இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்திருந்து பார்ப்போம். இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.