close
Choose your channels

பக்கா கமர்ஷியல் பேக்கேஜ்; 'பத்து தல' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபல தயாரிப்பாளர்..!

Thursday, March 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தை பார்த்த பிரபல தயாரிப்பாளர் பக்கா கமர்சியல் பேக்கேஜ் என்று தெரிவித்துள்ளதை அடுத்து முதல் விமர்சனமே பாசிட்டிவ் விமர்சனமாக வந்துள்ளதாக கருதப்படுகிறது.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக வரும் 18ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் சில முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை தான் பார்த்ததாக குறிப்பிட்டுள்ள பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். ‘பத்து தல’ படம் பார்த்தேன், படம் மிகவும் பிடித்திருக்கிறது, பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் உடன், நல்ல எமோஷன்களுடன் இந்த படம் உருவாகியுள்ளது. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பு கிருஷ்ணாவின் மேக்கிங் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக இரண்டாம் பாதியில் மிகவும் அருமையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பத்து தல’ படத்தின் முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்ததை எடுத்து சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.